சென்னை: மெரினா கடற்கரை பகுதியில் போக்குவரத்து காவலர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவல்லிக்கேணி போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் சண்முகசுந்தரம், மெரினா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரு இளைஞரின் வாகனத்தின் இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தால் அவருக்கு ரூ.2000 அபராதம் விதித்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த திருவல்லிக்கேணியில் பணியாற்றும் மற்றொரு போக்குவரத்து காவலரான ராகவன், காவலர் உடை இல்லாமல் சம்பவ இடத்திற்கு வந்து அபராதம் விதித்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இன்சூரன்ஸ் இல்லாததற்காக அபராதம் விதிக்க முடியாது என்று கூறி சண்முகசுந்தரத்திடம் வம்பிழுத்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாக்குவாதம் கைகலப்பாக மாறி, சண்முகசுந்தரம் ராகவனை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவலர்கள் இருவரும் பொதுமக்கள் முன்பு அடித்துக் கொண்ட வீடியோ வெளியான நிலையில், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Be the first to comment