நீலகிரி: உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றஉம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நீர் பனிப்பொழிவு நடுங்க வைக்கும் குளிரால் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகை, கோத்தகிரி போன்ற சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் நீர் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதியில் துவங்கும் நீர் பனிப்பொழிவு படிப்படியாக உறைப்பனியாக மாறும் நிலை ஏற்படும். தற்போது அதிகாலை நேரங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது.இந்நிலையில் உதகை, குன்னூர், கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் தோட்டத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கடும் குளிரில் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், தற்போது நீர் பனி பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவி வரும் நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் உறைப்பனி பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.
Be the first to comment