சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள அரசு மருத்துவமனையை எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் ஆய்வு செய்தனர்.பெரும்பாக்கத்தில் 51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த அரசு மருத்துவமனை கட்டிடத்தின் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில், அதனை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மருத்துவமனையின் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து வரும் நிலையில், அரசு அதிகாரிகளுடன் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கட்டடத்தை பார்வையிட்டு கட்டடத்தில் உள்ள சிறு சிறு குறைகளை கண்டறிந்து அதை சரி செய்ய கூறினார். அரசு மருத்துவமனை கட்டுவதற்காக பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில் சுமார் 21 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் சுமார் 11200 சதுர மீட்டரில் 51 கோடி மதிப்பில் 262 படுக்கைகள் கொண்ட ஐந்து அடுக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை ஓஎம்ஆர், ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அதை ஒட்டி உள்ள 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
Be the first to comment