தஞ்சாவூர்: சதய விழாவின் முக்கிய நிகழ்வான பெருவுடையார் பெரிய நாயகி அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 1,040வது சதய விழாவாகும்.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது நேற்று முன்தினம் (அக் 31) தொடங்கிய நிலையில், நவ.1ஆம் தேதியான நேற்று 2வது நாள் நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு 48 வகையான வாசனை திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து பட்டிமன்றம், கருத்தரங்கம், இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்வின் 50க்கும் மேற்பட்ட இசை வாத்தியங்கள் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகளுக்கு நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Be the first to comment