சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டில் கட்சி நிர்வாகிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்திக்க ஏராளமானோர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்து வாழ்த்தினர்.சீமானை சந்திக்க நீண்ட வரிசையில் காத்திருந்து கட்சியினர் அவரை சந்தித்தனர். பின்னர், சீமானுடன் அக்கட்சி நிர்வாகிகள் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த நிலையில் சீமான் இல்லத்திற்கு வந்த சுமார் 3000க்கும் மேற்பட்டோருக்கு தட புடலாக சைவம் மற்றும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.அந்த விருந்தில் கறி சோறு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் பக்கோடா, மீன் வருவல் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டிருந்தன. சீமானை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்கு காலையிலிருந்து இரவு வரை கட்சியினர் மற்றும் பிரபலங்கள் என பலர் வந்து கொண்டிருந்தனர். செய்தியாளர்கள் சீமானை சந்தித்து பேட்டி கேட்டதற்கு, "இன்று எனக்கு பிறந்தநாள், இன்று ஒரு நாள் விட்டு விடுங்கள்" என சிரித்துக் கொண்டே கூறினார்.
Be the first to comment