Skip to playerSkip to main contentSkip to footer
  • 3 weeks ago
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.6.18 கோடி பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாதம் பௌர்ணமி முடிந்து நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் பணத்தை எண்ணும் பணிகள் நேற்று தொடங்கியது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்களில் உள்ள காணிக்கைகளும் ஒரே இடத்தில் எண்ணப்பட்டது. ஆடி மாதம், பௌர்ணமி, கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்கள் அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக மட்டும் ரூ6 கோடியே 18 லட்சத்து 53 ஆயிரம் 550 செலுத்தியுள்ளனர். மேலும் தங்கம் 275 கிராம், வெள்ளி 2,700 கிராம் என   பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்டுள்ளன.

Category

🗞
News
Transcript
00:00Music
00:05Music
00:12Music
Be the first to comment
Add your comment

Recommended