அரியலூர்: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா அரியலூரில் பல்வேறு பள்ளிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று (நவ.14) நாடு முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். நேருவின் மீது குழந்தைகள் பெரும் அன்பை வைத்திருந்தனர். குழந்தைகள் நேருவை அன்புடன் "நேரு மாமா" என அழைத்தனர்.இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவ மாணவிகள் குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதற்காக ரோஜாவின் ராஜா நேரு போன்று உடை அணிந்து வந்தனர். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, நடனம் போன்ற பல்வோறு விதமான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. நேரு குழந்தைகளை தோட்டத்தில் உள்ள மொட்டுக்களை போன்றவர்கள் அவர்களை மிகவும் கவனமாகவும் அன்புடனும் பராமரிக்க வேண்டும் அவர்கள் தான் இந்நாட்டின் எதிர்கால குடிமக்கள் என்று கூறியுள்ளார். குழந்தைகளை போற்றுவோம் நல்ல குடிமக்களை உருவாக்குவோம்.
Be the first to comment