சென்னை: தமிழ்நாட்டில் நவராத்திரி பண்டிகை இன்று (செப்.22) முதல் அடுத்த 9 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விஜிபி மரைன் கிங்டம் மீன் அஞ்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அன்றாடம் அதிகமாக வருகை தருகிறார்கள். இங்கு ஆழ்கடல் மீன்கள், சதுப்பு நிலக்காடு மீன்கள், நன்நீர் மீன்கள் என 5,000க்கும் அதிகமான ஆழ்கடல் மீன் வகைகள் வளர்க்கப்பட்டு, கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நீருக்கு அடியில் கண்காட்சிக்காக மீன் இருக்கும் கண்ணாடி பெட்டிகளுக்குள் கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த கொலு கண்காட்சியை பிரபல கர்நாடக மற்றும் திரைப்பட பின்னணி பாடகி பாம்பே சாரதா தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியானது நேற்று முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொலுவில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறிய முதல் பெரிய வரையிலான அடுக்குகள் கொண்ட சாமி மற்றும் தலைவர்களின் சிலைகள் நீரில் மிதிக்காமல் நேர்த்தியாக கொலுவாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Be the first to comment