சென்னை: சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் பகுதியில் பேரக்ஸ் சாலை அமைந்துள்ளது. கே.எம்.கார்டன் பட்டாளம், பெரம்பூர், வியாசர்பாடியில் இருந்து புரசைவாக்கம் செல்பவர்கள் அனைவரும் இந்த சாலை வழியாகதான் செல்ல வேண்டும். இந்த சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும். இந்நிலையில், நேற்றிரவு இந்த சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடைவிதித்து மாற்றுபாதை ஏற்பாடு செய்தனர். சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட குழாய் பதிக்கும் பணியால், இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பேசிய அப்பகுதிவாசி ஒருவர், “எங்கள் பகுதியில் தீடீரென பள்ளம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு முன்பாக 3 முறை இதேபோல் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. பின்னர் சீரமைக்கப்பட்டது. இதுபோல் திடீர் பள்ளம் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, இந்த பிரச்னைக்கு மாநாகராட்சி நிரந்தரத் தீர்வு காண வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
Be the first to comment