காஞ்சிபுரம்: சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட போது, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் தேவிகா தலைமையில் 300-க்கு மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரந்தர அரசு பணியிடங்களாக நிரப்ப வேண்டும்.குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 ரூபாய் வழங்க வேண்டும்.சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ. 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சமும் பணிக்கொடை நிதி வழங்க வேண்டும்.குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் 9 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும்.உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.பணி நிரந்தரம் என்ற கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை என்று இவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
Be the first to comment