சென்னை: உடல் ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி மாம்பாக்கத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.சென்னை கேளம்பாக்கம் அடுத்த மாம்பாக்கத்தில் உடல் ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று (நவ. 17) மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பசுமை நிறைந்த இயற்கை வழித்தடத்தில் 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்று ஓடினார்கள்.மேலும், இந்த மாரத்தான் போட்டியில் மாடலிங் துறையில் சாதனை புரிந்தவரும், உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாரத்தானில் ஓடிய பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மிலிந்த் சோமனும் அவர்களுடன் இணைந்து ஓடினார்.போட்டியின் இறுதியில் முதல் 3 இடங்களை பிடித்த நபர்களுக்கு, பரிசுகளுடன் பதக்கமும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஆண்களில் 20 புல்-அப்ஸ் மற்றும் பெண்களில் 10 புல்-அப்ஸ் எடுத்தவர்களுடன் நடிகர் மிலிந்த் சோமன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
Be the first to comment