திண்டுக்கல்: நிலக்கோட்டையில் கேரளாவைச் சேர்ந்த பூ ஏற்றுமதியாளர் வீடு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மெகாசிட்டியில் வசித்து வருபவர் முகமது அலி (52). கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக நிலக்கோட்டையில் பூ ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.நிலக்கோட்டை பூ சந்தையில் இருந்து பூக்களை விலைக்கு வாங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வசித்து வரும் நிலக்கோட்டை வீடு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் கேரள பதிவெண் கொண்ட நான்கு வாகனங்களில் வந்த பத்திற்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர், இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நீடித்தது. அப்போது வீடு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்த ஆவணங்கள் குறித்து வருமான வரித் துறையினர் ஆய்வு செய்தனர்.முறையாக வருமான வரி கட்டவில்லை என்பதால் சோதனையாக மேற்கொண்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Be the first to comment