உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மைதானத்தில் தேசிய அளவில் ராணுவ வீரர்களுக்கான நீண்டதூர ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.இந்த நீண்டதூர ஓட்டப் பந்தயம், வெலிங்டன் தங்கராஜ் மைதானத்தில் நடைபெற்றது. பந்தய தூரம் 10 கிலோ மீட்டர் ஆகும். வீரர்கள் 8 அணிகளாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் தலா 6 வீரர்கள் இடம் பெற்றனர். போட்டியை எம்.ஆர்.சி. ராணுவ முகாமின் லெப்டினென்ட் கர்னல் குட்டப்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 35 நிமிடங்களில் வீரர்கள் இலக்கினை அடைந்தனர். இந்தப் போட்டியில் முதலிடத்தை செகண்ட் மெட்ராஸை சேர்ந்த வீரர் ஜிதேந்தர் குமார் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 32.4 நிமிடங்களில் கடந்தார். மேலும் 2-ம் இடத்தை 32.01 நிமிடங்களில் அடைந்து ரைபிள் ஊமோச்சிட் பிரமோத் சிங், மூன்றாவது இடத்தை சுக்கின் கார்ட்ஸ் 15 வது கோர் கௌரவ மாத்தூர் பெற்றனர். மேலும், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 11 ட்ராபிக் அணி வீரர்கள் வென்றனர். கர்னல் குட்டப்பா மற்றும் ராஜு உதர் ஆகியோர் இணைந்து வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.
Be the first to comment