சென்னை: வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.‘டிட்வா புயல்’ காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர்.வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் கேப்டன் கால்வாய் வழியாக பக்கிம்காம் கால்வாயில் கலக்கும். தற்போது, தொடர்ந்து பெய்து வரும் இந்த கனமழையால் கேப்டன் கால்வாய் முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட கேப்டன் கால்வாயின் கரையோரப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. அப்பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.முன்னதாக, அப்பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க, 100 குதிரை திறன் கொண்ட 2 மோட்டார்கள் மூலம் மழைநீர் கேப்டன் கால்வாய்க்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால், 5 மோட்டார்கள் மூலமாக மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Be the first to comment