ஈரோடு: பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்ததால், சத்தியமங்கலம் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை மற்றும் சம்பங்கிப் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு சாகுபடி செய்யும் பூக்களை சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, கடந்த வாரம் முழுவதும் மல்லிகைப் பூக்களின் விலை கிலோ ரூ.1100 ஆக இருந்தது.ஆனால், தற்போது நிலவும் பனிப்பொழிவால் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தைக்கு வரும் மல்லிகை வரத்து 5 டன்னிலிருந்து 1 டன்னாக குறைந்துள்ளது. வரத்து குறைவால் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.1100-க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று (நவ.22) கிலோ ரூ.1800 ஆக உயர்ந்துள்ளது. முல்லை பூ ரூ.720, சம்பங்கி ரூ.80 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர். தொடர்ந்து பூக்கள் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Be the first to comment