Skip to playerSkip to main contentSkip to footer
  • 3 months ago
திண்டுக்கல்: மாங்காய் விவசாயிகளுக்கு ஆதரவாக, மாங்காய்களை சாலையில் கொட்டி அதிமுக சார்பில் போராட்டம் நடத்தினர். இதில், ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சாலையில் கிடந்த மாங்காய்களை பொதுமக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அள்ளிச்சென்றனர்.மா விவசாயிகளுக்கு ஆதரவாக, திண்டுக்கல்  நத்தம் பேருந்து நிலையம் முன்பாக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், "மா"விவசாயிகளுக்கு மாங்காய்களை தமிழக அரசு நேரடி கொள்முதல் செய்திட வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையாக ஏக்கருக்கு, ரூ.25 ஆயிரம் அல்லது டன் ஒன்றுக்கு ரூ.5000 கூடுதல் ஆதார விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும்.மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். மேலும், இடுபொருட்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கையில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பியும், மாங்காய்களை சாலையில் கொட்டியும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டம் முடிந்து கட்சி நிர்வாகிகள் கலைந்து சென்ற நிலையில், சாலையில் கொட்டப்பட்ட மாங்காய்களை சுற்றி இருந்த பொதுமக்கள் அனைவரும், தங்கள் வைத்திருந்த பைகளில் அள்ளிச்சென்றனர். அதிலும், ஒருவர் தான் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து அதில் மாங்காய்களை சேகரித்து கொண்டு சென்றார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 

Category

🗞
News
Transcript
00:00,
00:07,
00:10.
00:14.
00:16.
00:18.
00:20.
00:22.
00:24.
00:26.
00:28.
Be the first to comment
Add your comment

Recommended