Skip to playerSkip to main content
  • 2 days ago
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ரூ.60 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தசாரா திருவிழா புகழ் பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து இந்த விழாவில் பங்கேற்பார்கள்.இந்த கோயிலில் 18 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோயில் செயல்பட்டு வருகிறது. கோயிலில் உள்ள உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்படும். இந்த நிலையில் கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி கோயில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. அறங்காவலர் குழுத்தலைவர் கண்ணன், கோயில் செயல் அலுவலர் வள்ளி நாயகம் உள்பட ஏராளமான பக்தர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ரூ.60 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 87 கிராம் தங்கம், 850.6 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.

Category

🗞
News
Transcript
00:00Music
00:04Music
00:25Music
Be the first to comment
Add your comment

Recommended