Skip to playerSkip to main content
  • 8 months ago
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளியில் செங்கோல் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் - பாக்கியலட்சுமி தம்பதியின் மகன் பிரவின் திருமணம் மே 28 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில், திருமண வரவேற்பு விழா பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டி வேல் மஹாலில் நேற்று (ஜூன் 1) பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த வரவேற்பு விழாவில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது, பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தினர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் பொறித்த ஆள் உயர வெள்ளி செங்கோலைக் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.இந்நிகழ்வில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், உதயகுமார், ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுக, பாஜகவின் முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Category

🗞
News
Transcript
00:00Thank you for joining us.
Comments

Recommended