விழுப்புரம்: இரவில் தெருவோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட குட்டவாப்பு தெருவை சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவர் கடந்த 5 ஆம் தேதி இரவு தனது வீட்டு வாசல் முன்பு தனது ஆட்டோவை நிறுத்தி வைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென இரவு 11:30 மணி அளவில் வெளியே கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது மது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த மூன்று இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவை உடைத்துள்ளனர். இது குறித்து சாதிக் பாட்ஷா கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளனர். இதே போன்று பக்கத்து தெருவான மோர் சார் தெருவில் நின்றிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் சாதிக் பாஷா கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த முகமதுஆசிப் (20) மற்றும் அவரது நண்பர்களான புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதி சேர்ந்த கிருபா சங்கர் (20) உள்ளிட்ட இரு இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (24) என்பவரை தேடி வருகின்றனர். மேலும் 3 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து தெருவோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கண்ணாடிகளை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Be the first to comment