தஞ்சாவூர்: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு, கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில். இங்கு, முருகப்பெருமான், தந்தை சிவபெருமானுக்கு ’ஓம்’ எனும் பிரணவ மந்திரப் பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்ற பெருமை உள்ளது.இக்கோயிலில், கந்தசஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை என இரு வேளையிலும் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. இந்த நிலையில், கந்த சஷ்டியின் 6 ஆம் நாளான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, விசேஷ மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, உற்சவருக்கு 108 சங்கு அபிஷேகத்துடன் நடைபெற்று, மாலை அன்னை மீனாட்சியிடம் வேல் வாங்கும் நிகழ்வும், அதனைத்தொடர்ந்து கோயில் சன்னதியில் சூரசம்ஹாரமும் நடைபெறும். நாளை இரவு தேவசேனா திருக்கல்யாண வைபவம் நடைபெறு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment