தூத்துக்குடி: நவம்பர் 3ஆம் தேதி முதல் கடல் மீன்வள கணக்கெடுப்பு எடுக்கப்படும் என மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி முனைவர் லவ் சன் எட்வர்ட் தெரிவித்தார். இது தொடர்பாக, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி முனைவர் லவ் சன் எட்வர்ட் செய்தியாளர்களிடம் கூறும் போது, " நவம்பர் 3ஆம் தேதி முதல் கடல் மீன்வள கணக்கெடுப்பு தொடங்கி டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பில் மீனவ குடும்பங்கள், மீன்பிடி படகுகள், வலைகள், விற்பனை வசதிகள், கல்வி, சமூக நிலை கிராமங்களின் அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.மீனவர்களின் நலத்திட்டங்கள், கடலோர உள்கட்டமைப்பு, வாழ்வாதார மேம்பாடு, கடல் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இந்த கணக்கெடுப்பு அடிப்படையாக அமையும். இந்த கணக்கெடுப்பு மூலமாக கிடைக்கும் தகவல்களின் மூலமாக வரும் காலத்தில் மீனவர் நலத்திட்டங்கள், கடலோர கட்டமைப்பு மேம்பாடுகள், மீன்பிடி மேலாண்மை கொள்கை, கடல் உயிரின பாதுகாப்பு, கல்வி, சுகாதார மற்றும் தொழில் வாய்ப்புகள் போன்றவற்றை உருவாக்குவதற்கு இது வழிவகுக்கும். எனவே, இந்த தகவல்கள் அனைத்தும் பிரதம மந்திரி மத்திய யோஜனா திட்டத்தின் கீழ் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்று கூறினார்.
Be the first to comment