சென்னை: புரட்டாசி மாதம் தொடங்கி நிலையில் மீன்களை வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன் மார்க்கெட் களையிழந்து காணப்பட்டது.சென்னையில் மிகவும் பிரபலமான மீன் மார்க்கெட் காசிமேடு மார்க்கெட். அங்கு விடியற்காலை முதல் மீன் விற்பனை அமோகமாக காணப்படுவது வழக்கம். அதுவும் வார விடுமுறைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், இன்று ஞாயிற்றுகிழமை என்றாலும் புரட்டாசி மாதம் என்பதாலும், மகாளய அமாவாசையை முன்னிட்டும் அதிகளவிலான மக்கள் மீன்களை வாங்க வரவில்லை. அதனால், காசிமேடு மீன் மார்க்கெட் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மீன் வரத்து அதிகமாக இருந்தது. இருப்பினும், மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகளவில் இல்லாத நிலையில் சில்லரை வியாபாரிகள், உணவகங்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர். இந்த மாதம் முழுவதும் மீன் வாங்க கூட்டம் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காசிமேடு மீன் விலை:வரி.எண் மீன் வகை விலை (ரூ)1.வஞ்சிரம்ரூ.800 முதல் ரூ.10002.கொடுவாரூ.8003.தேங்காய் பாறைரூ.8004.ஷீலாரூ.5005.சங்கரா ரூ.4006.பால் சுறா ரூ.5007.பாறைரூ.4008.இறால்ரூ.3009.நண்டுரூ.30010.நவரைரூ.30011.பண்ணாரூ.30012.காணங்கத்தை ரூ.30013.கடுமா ரூ.30014.நெத்திலி ரூ.200
Be the first to comment