தஞ்சாவூர்: மகள் திருமண அழைப்பிதழை விவசாயி ஒருவர் 2026 ஆண்டுகான நாள் காட்டியாக அச்சிட்டு வழங்கி ஊர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தை அடுத்துள்ளது குடமங்கலம் கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் விவசாயியான மனோகரன் - தீபா தம்பதியினர். இவர்களது மகள் துர்க்காதேவி (எ) பூஜா மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த நடத்துனர் ரவிச்சந்திரன் - சுப்புலட்சுமி தம்பதியினரின் மகன் சண்முக வடிவேலுவிற்கும் வருகிற (நவ23) ஆம் தேதி அன்று திருமணம் நடைபெறவுள்ளது.இதனால், சொந்தங்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு கொடுப்பதற்காக வித்தியாசமாக யோசித்த விவசாயி மனோகரன், திருமணத்திற்கான அழைப்பிதழை 2026 ஆண்டுக்கான நாள் காட்டியாக அச்சிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவருடைய வித்தியாசமான சிந்தனை முயற்சிக்கு பலரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். இவரது வீட்டிற்கு திருமண அழைப்பிதழாக வழங்கப்படும் 2026ம் ஆண்டு நாள்காட்டியில் முகப்பு பக்கத்தில் புகைப்படம் மற்றும் விவரங்கள் அனைத்தையும் நாள் காட்டியிலேயே அழகாக கொண்டு வந்து அசத்தியுள்ளார். இந்த வித்தியாசமான நாள் காட்டி வடிவ திருமண அழைப்பிதழை தனது கிராமத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கும் வழங்கி, தங்கள் மகள் திருமணத்தில் அவசியம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Be the first to comment