தருமபுரி: மது மற்றும் போதைப்பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என 5,000 பேர் பங்கேற்றனர்.மது மற்றும் போதைப்பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தருமபுரி ரோட்டரி சங்கம் சார்பில் 3-வது வருடமாக ‘SAY NO TO DRUGS’ என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றுது. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடைபெற்ற இப்போட்டியை தருமபுரி டிஎஸ்பி சிவராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி நான்கு ரோடு, பாரதிபுரம் சென்று மீண்டும் விளையாட்டு மைதானம் என மொத்தம் 5.5 கி.மீ. வரை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என 5,000 பேர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் லோகேஷ், சந்தோஷ்குமார், பூவரசன் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பெண்கள் பிரிவில் கௌரி, இளவரசி, கோகிலா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர். இரு பிரிவினருக்கும் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 4 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.
Be the first to comment