திருப்பத்தூர்: எம். கோயில் வட்டம் பகுதியைச் சேர்ந்த திருப்பதியின் மனைவி கோமதி (34) என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். அவர் தனது வாழ்வாதாரத்திற்காக சுமார் 30 ஆடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வளர்த்து வரும் ஆடு ஒன்று நேற்று இரவு குட்டி ஈன்றுள்ளது.அதில் பிறந்த ஆட்டுக்குட்டி வழக்கத்திற்கு மாறாக மூன்று கால்களுடன் காணப்படுகிறது. பொதுவாக ஆட்டுக்குட்டிகள் நான்கு கால்களுடன் பிறக்கும் நிலையில், மூன்று கால்களுடன் பிறந்த இந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்த கோமதி ஆச்சரியமடைந்துள்ளார். மேலும், இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதை தொடர்ந்து, சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கோமதியின் வீட்டிற்கு வந்து வித்தியாசமான தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.மேலும் இயற்கையின் வித்தியாசமான நிகழ்வாகக் கருதப்படும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. அதோடு மூன்று கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.