நீலகிரி: உதகையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு, விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் உதகை ஹில்பங்க் பகுதியில் இன்று (நவ.16) அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. குறிப்பாக, பெட்ரோல் பங்கின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு வந்த கார், தலைகீழாகப் பறந்து சென்று கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இருந்தாலும், காரை ஓட்டி வந்த நபர் இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திடீர் விபத்தால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஓட்டுநரை மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், காரை ஓட்டி வந்தது குளிச்சோலை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும், கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தால் விபத்து ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, காயமடைந்த சுரேஷை உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு கார் பறந்து சென்று விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Be the first to comment