வேலூர்: காட்பாடியில் தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் காட்பாடி – சித்தூர் பேருந்து நிலையம் அருகே, தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த போஸ்டர்களில், “டபுள் என்ஜின் டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது” “அடிமைகளை விரட்டுவோம், தமிழ்நாட்டை காப்போம்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.மேலும், பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் NDA என குறிப்பிடப்பட்ட ரயில் என்ஜினில் தொங்கிக் கொண்டு செல்வது போன்று இந்த போஸ்டர்கள் உள்ளன. பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த போஸ்டர்களில் எந்த அரசியல் கட்சி அல்லது அமைப்பின் பெயரும், தொடர்பு விவரங்களும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடப்படவில்லை.
Comments