தேனி: பொங்கல் பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முன்னிட்டு கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தைத்திருநாளான பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வருகை தந்தனர்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள் கும்பக்கரை அருவிக்கு பொங்கல் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை கொண்டாட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து அருவியில் குளித்து மகிந்தனர். மேலும், அருவியில் அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் குடும்பத்துடன் குளித்தனர். இதனால் அருவியில் அதிகப்படியாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களை வரிசையாக குளிக்க அனுப்பினர்.
Comments