Skip to playerSkip to main content
  • 2 weeks ago
அரியலூர்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று (அக்.11) தென்னகத்தின் திருப்பதியான கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.தென்னகத்தின் திருப்பதி என அழைக்கப்படும் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் உருவமில்லாமல், சுமார் 12 அடி உயரமுள்ள நாமங்கள் பொறிக்கப்பட்ட கம்பத்தில் அருள்பாலிப்பது இதன் தனிச்சிறப்பாகும். இதன் அருகே அனுமானின் பெரிய சிலையும் உள்ளது.இந்த நிலையில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று (அக்.11) பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில், அரியலூர் மட்டுமின்றி தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ’கோவிந்தா, கோவிந்தா’ என்ற கோஷங்களுடன் பெருமாளை வழிபட்டனர். கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் வசதிகளுக்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் அரியலூரில் இருந்து கோயிலுக்கு ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Category

🗞
News
Transcript
00:00.
00:05.
00:10.
Be the first to comment
Add your comment

Recommended