கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே தேங்காய் நார் கம்பெனியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 40 டன் கொப்பரைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் நஞ்சை கவுண்டன்புதூர் பகுதியில் ஆயில் மில் செயல்பட்டு வருகிறது. இங்கு, தேங்காய் நார் மற்றும் கொப்பரைகள் தரம் பிரிக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில், நேற்று இரவு இப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் மில்லில் இருந்த 40 டன் கொப்பரைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரிவித்துள்ளனர். தொடர் மழை காரணமாக மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? இல்லை வேறு எதுவும் காரணங்கள் உள்ளதா? என ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Be the first to comment