Skip to playerSkip to main contentSkip to footer
  • 3 days ago
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே காரில் கடத்திவரப்பட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான, 14 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் நேற்று (ஜூலை 20) அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது. தொடர்ந்து, அதிவேகமாக வந்த கார் நிற்காமல் அங்கிருந்து சென்றதால், சந்தேகமடைந்த மற்றொரு காரின் ஓட்டுநர் அந்த காரை பின் தொடர்ந்து சென்றார்.இதில், வேகமாக சென்ற கார் கண் இமைக்கும் நேரத்தில் கதிரிமங்கலம் அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில் நின்றிருந்த பொக்லைன் (ஜேசிபி) இயந்திரத்தின் மீது மோதியது. விபத்தை தொடர்ந்து காரில் இருந்த 5 நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது, காரில் 14 செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த வனத்துறையினர் கடத்திவரப்பட்ட செம்மரக்கட்டைகளையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.செம்மரம் கடத்திவரப்பட்ட காரின் நம்பர் பிளேட்டில் ஆந்திரா பதிவெண் இருந்ததால், செம்மரம் அங்கிருந்து கடத்தி வரப்பட்டதா? இல்லை போலி நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டதா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Category

🗞
News

Recommended