Skip to playerSkip to main content
  • 5 months ago
அரியலூர்: படைபத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தந்த பக்கர்கள் மீது ராட்சத டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.அரியலூர் நகராட்சிக்குட்பட்ட மேலத் தெருவில் உள்ள படைபத்து மகா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி யாக சாலை அமைக்கப்பட்டு பூஜையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா குடமுழுக்கு இன்று காலை நடைபெற்றது.  4 கால பூஜைகள் முடிவற்ற பின்பு, மகா தீபாராதனை காட்டப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் கலசத்தில் வைத்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராஜகோபுரம், அம்பாள் கோபுரம் ஆகியவற்றிற்கு சிவாச்சாரியார்களால் எடுத்து வரப்பட்ட புனித நீர்ரை, கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு குடமுழுக்கு  நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், முன்னாள் அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் குடமுழுக்கு  விழாவில் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவிற்கு வந்த பக்தர்களுக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் 'ராட்சத ட்ரோன்' மூலம் புனித நீர் கொண்டு செல்லப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

Category

🗞
News
Transcript
00:00Thank you for joining us.
00:30Thank you for joining us.
Comments

Recommended