தஞ்சாவூர்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரும் 16-ம் தேதி வரை பூம்புகார் அரசு விற்பனை நிலையத்தில் 'கிருஷ்ண தரிசன கண்காட்சி' நடைபெறுகிறது.இது குறித்து பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சக்திதேவி கூறுகையில், "இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஆண்டுதோறும் 'கிருஷ்ண தரிசனக் கண்காட்சி” நடைபெரும். அதன்படி இந்த ஆண்டும் தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் வருகிற 16- ஆம் தேதி வரை கிருஷ்ண தரிசன கண்காட்சி நடைபெறுகிறது.இந்த கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பொருட்களில் வைத்து தயாரிக்கப்பட்ட கிருஷ்ணர் பொம்மைகள், பல வகை கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. அனைத்து கிருஷ்ணர் பொம்மைகளுக்கும் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.இந்த கண்காட்சி வாயிலாக ரூ.6 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுடைய பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவும், வாடிக்கையாளர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவினை சிறப்பாக கொண்டாடப் பல வித கிருஷ்ணர் பொம்மைகள் வரவழைத்து ஒரே இடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
Be the first to comment