Skip to playerSkip to main content
  • 1 week ago
திண்டுக்கல்: கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல இன்று முதல் QR கோடு மூலம் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக கொடைக்கானல் இருந்து வருகிறது. இங்குள்ள சுற்றுலா தலங்கள் பெருமளவில் வனத்துறை கட்டுபாட்டில்தான் உள்ளன. குறிப்பாக குணா குகை, தூண் பாறை, மோயர் சதுக்கம், பைன் மரக் காடுகள், பேரிஜம் ஏரி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்ற பிறகே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்ததனர்.இந்த நிலையில் இன்று (ஜன 12) முதல் QR கோடு மூலம் phone pay, gpay போன்ற இணையதள பரிவர்த்தனைகளை பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் கட்டணம் செலுத்தி உள்ளே செல்ல அனுமதித்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படும் விதமாக, பசுமை பள்ளத்தாக்கு பகுதி மற்றும் அதிலிருந்து 300 மீட்டர் தொலைவில் ஒரு இடம் என 2 இடங்களில் தனித்தனியாக QR ஸ்கேனர் மூலம் பணம் பெறப்பட்டு அதற்கான சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் வனத்துறை பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் QR மூலமாக பணம் செலுத்தலாம் என அறிவித்து வருகின்றனர். இந்த பகுதியில் பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்ட நிலையில், தற்போது எளிய முறையில் பணவர்த்தனை வேகமாக நடைபெறுவதால், வாகனங்கள் விரைந்து செல்கின்றன. இருப்பினும் வார இறுதி நாட்களில்தான் இந்த புதிய நடைமுறை எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பது தெரியவரும். 

Category

🗞
News
Transcript
00:00Transcription by CastingWords
00:30Transcription by CastingWords
01:00Transcription by CastingWords
01:30Transcription by CastingWords
Be the first to comment
Add your comment

Recommended