தேனி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) உள்ள குளறுபடிகளை கண்டித்து தேனியில் த.வெ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் ஒவ்வொரு மாவட்டம் தோறும் கடந்த 4 ஆம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் உள்ள குளறுபடிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக தேனி பங்களாமேடு பகுதியில் த.வெ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 மேற்பட்ட த.வெ.காவினர் கலந்து கொண்டனர்.வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் நடைபெறும் பல்வேறு குளறுபடிகளை கண்டித்தும், இதனால் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
Be the first to comment