செங்கல்பட்டு: மாநில அளவிலான சைக்கிளிங் இறுதிப் போட்டியில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வீரர் முதல் பரிசினை தட்டி சென்றார்.தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான ‘ஸ்டேட் சாம்பியன்ஷிப் 2025’ இறுதிப்போட்டி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் புறவழிச் சாலையில் இன்று (நவ.3) நடைபெற்றது. இப்போட்டியினை தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன் தலைவர் சுதாகர் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.14 வயதுக்குட்பட்டவர்கள், 16 வயதுக்குட்பட்டவர்கள், 18 மற்றும் 23 வயதுக்குட்பட்டவர்கள் என 4 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 434 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் பரிசு மற்றும் கோப்பையை வழங்கி பாராட்டினார். குறிப்பாக, 28 மாவட்டங்களை சேர்ந்த சைக்கிள் ஓட்டும் வீரர்கள் கலந்து கொண்ட இந்த இறுதிப் போட்டியில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நபர் முதல் பரிசை தட்டிச் சென்றார்.மேலும், தமிழ்நாடு மாநில சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்ற வீரர்கள், ஒடிசாவில் டிசம்பர் மாதம் 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment