தேனி: 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு போடிநாயக்கனூர் சட்டமன்ற அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 79-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.அந்த வகையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற அலுவலகத்தில், எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இதில், ஏராளாமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய அவர், “நாடு சுதந்திரம் அடைவதற்கு உழைத்த தியாகிகளுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். எனவே, நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னின்று கடைமை ஆற்றுவோம்” எனக்கூறி அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.