தேனி: கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 9-வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. ஆனால், தற்போது வரை வெள்ளப்பெருக்கு குறையாததால் 9-வது நாளாக இன்றும் அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதேபோல், போடியிலிருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில் உள்ள அணை பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால், இங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா வந்தவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
Be the first to comment