Skip to playerSkip to main content
  • 7 months ago
நீலகிரி: உதகையில் 127-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். தற்போது இந்த மலர் கண்காட்சியின் கழுகு பார்வை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடைகாலமான மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 127-ஆவது மலர் கண்காட்சி, மே 15-ஆம் தேதி தொடங்கி வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் இரண்டு லட்சம் மலர்களால் ஆன அரண்மனை, 15 ஆயிரம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட ராஜ சிம்மாசனம், கரிகாலன் கல்லணை, ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்ன பறவை, ரதம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள், கார்னேசன் மலர்கள், ரோஜா, கிரைசாந்திமம் உள்ளிட்ட மலர்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சிக்கு வருகை புரிகின்றனர். அவ்வாறு வருபவர்கள், அங்குள்ள ஆர்க்கிட் மலர்கள் அருகில் நின்று புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்து செல்கின்றனர். கண்காட்சி தொடங்கப்பட்ட கடந்த 6 நாட்களில், 1 லட்சத்து 13 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர்.இந்நிலையில், பூங்காவின் கழுகு பார்வை காட்சியை தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகல் தற்போது வைரலாகி வருகின்றன.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended