திருவண்ணாமலை: ரஜினிகாந்தின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர் காய்கறிகளை பயன்படுத்தி ரஜினியின் உருவப்படத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது 75-வது பிறந்தாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘படையப்பா’ படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும் தனது பிறந்தநாளை ’ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த ஓவியரும், ரஜினியின் ரசிகருமான ஹரிஷ் பாபு, 10 கிலோ பீன்ஸ், 1 கிலோ கேரட் காய்களை பயன்படுத்தி தத்ரூபமாக ரஜினியின் உருவப்படத்தை வடிவமைத்துள்ளார். அதன் கீழே 50 ஆண்டு ரஜினியிஸம் என்று காய்கறிகளால் எழுதியுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாககி வைரலாகி வருகிறது.ஹரிஷ் பாபு கடந்த 20 ஆண்டுகளாக, அரிசி, காய்கறிகள், இலைகள், பேப்பர்கள் போன்றவற்றை பயன்படுத்தி தத்ரூபமாக பல ஓவியங்களை வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment