காஞ்சிபுரம்: சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் டிஜிட்டல் முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர். சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தற்போதைய எதிர்க்கட்சியான அதிமுக, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் முறையிலான வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம், அந்த வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.கடந்த அதிமுக ஆட்சியையும் தற்போதைய திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு, சமையல் செலவுகள், எரிவாயு, மின்சாரம், சொத்துவரி உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கான விலைவாசி உயர்வுகளை பட்டியலிட்டு, அதன் வேறுபாடுகளை பொதுமக்களிடம் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.மேலும், தற்போதைய திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை டிஜிட்டல்முறையில் பதிவேற்றி, “ரசீது (Bill)” வடிவில் வழங்கி, இரு ஆட்சிகளுக்கிடையேயான வித்தியாசங்களை ஆதாரத்துடன் விளக்கினார். இந்த டிஜிட்டல் முறையிலான வாக்கு சேகரிப்பு முயற்சி பொதுமக்களிடையே பெரும் கவனத்தை பெற்றது.
Comments