Skip to playerSkip to main content
  • 1 week ago
அரியலூர்: தமிழ்நாட்டையும், தமிழர்களையும் தொடர்ந்து பயங்கரவாதிகள் போல் சித்தரிப்பதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும் பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.மேலும் தமிழ் பண்பாடு, தமிழர்களின் கலாச்சாரத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மதிப்பளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கோரிக்கையின் பேரில், கிண்டியில் உள்ள ’ராஜ்பவன்’, மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலின்படி ’மக்கள் பவன்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடைபெற்ற மாநில ஆளுநர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவன் பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended