காஞ்சிபுரம்: தேசிய குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் ஆட்சியர் தலைமையில் “Walk For Children” என்ற பேரில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்தியாவில் தேசிய குழந்தைகள் தினம் நவ.14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதேபோல், சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் நவ.19ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “Walk For Children” என்ற பேரில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் சுமார் 250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ’குழந்தைகள் உரிமைகள்’ மற்றும் ’குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல்’ தொடர்பான வாசகங்கள் பொருந்திய பதாகைகளை கையில் ஏந்தியடி மாணவர்கள் பேரணி சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி பேரணி பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.
Be the first to comment