Skip to playerSkip to main content
  • 4 months ago
தூத்துக்குடி: இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வப்போது, முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் பலரும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அந்த வகையில், இன்று (செப் 17) புதன்கிழமை நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குநருமான நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்தார். கோயிலில் மூலவர், சண்முகர், தக்ஷிணாமூர்த்தி, சூரசம்ஹார மூர்த்தி, தெய்வானை, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, கோயில் வளாகத்தில் இருந்து பேட்டரி கார் (Battery car) மூலம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended