தூத்துக்குடி: தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூத்துக்குடி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் குவிந்த 200 வகையான பட்டாசுகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு அதற்கு அடுத்தபடியாக பட்டாசுகள் தான். தீபாவளி பண்டிகையின் போது குழந்தைகள் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வர்கள். இதற்காக தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில், 5% தள்ளுபடியில் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை கையாளும் வகையில் சம்திங் சம்திங், பாப்கான், லெமன் ட்ரீ, தாமரை சக்கர்ஸ், ஹெலிகாப்டர், அவெஞ்சர்ஸ், ராக்கிங்டாம், ஸ்நோ-பால், விக்ராந்த், மான்ஸ்டர், ஜூப்ளி, குஷி, வொண்டர்நைட், ராயல்சல்யூட்,உள்ளிட்ட 200 ரகங்களில் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. 100 முதல் 6000 ரூபாய் வரை பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் நகரில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்து பட்டாசுகளை வாங்கி செல்கிறார்கள். சுய சேவை பிரிவின் கீழ் இங்கு பட்டாசு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் வருகை தந்து அவர்களுக்கு வேண்டிய பட்டாசுகளை அவர்களே பார்த்து எடுத்து செல்கிறார்கள். கூட்டுறவு பண்டகசாலை மூலம் கடந்த 50 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு விலை குறைவாக தரமான பட்டாசுகள் விற்பனை செய்து வருவதால் ஏராளமான பொதுமக்கள் கூட்டுறவு பண்டக சாலையை நாடி பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
Be the first to comment