திருநெல்வேலி: திசையன்விளை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் 32-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெருங்குளத்தில் அய்யா வைகுண்டர் பெருமைபதி திருவிழாவை முன்னிட்டு, முதன்முறையாக நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் இன்று (செப்.15) நடைபெற்றது. ஆர். ஆர். ரேசிங் கிளப் (RR Racing Club) சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் திசையன்விளை, வள்ளியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 32-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், 100 மீட்டர் தொலைவில் நாய்களுக்கான இலக்கு வைக்கப்பட்டிருந்தது. மணி அடித்ததும் நாய்கள், சிறுத்தைகளை போல சீறிப்பாய்ந்தன. இதில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ. 6000 வழங்கப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு போட்டியை கண்டு ரசித்தனர்.மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, நாய்கள் முககவசம் அணிந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. முன்னதாக, நாய்களின் உரிமையாளர்கள் போட்டியில் பங்கேற்கும் நாய்களுக்கு, ஊட்டச்சத்து பானங்கள் கொடுத்து உரிமைகள் தயார்படுத்தினர்.
Be the first to comment