பாடிகார்டுகளை நியமித்த நடிகர் பிரகாஷ் ராஜ்!- வீடியோ

  • 6 years ago
நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான பிரகாஷ்ராஜ் தனது பாதுகாப்புக்காக பாடிகார்டுகளை புதிதாக

நியமித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதுவதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்

பிரகாஷ்ராஜ்.

சமீப சில மாதங்களாக பிரகாஷ்ராஜ், ஆளும் பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இவரது

நண்பரான பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து

பாஜக-வினரை நேரடியாக எதிர்த்து வருகிறார்.

இவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சித்த பாஜக எம்பி மீது வழக்கு தொடுத்திருக்கிறார். மதவாதக்

கட்சியான பாஜக-விற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் எனத் தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
"சமீபகாலமாக பாஜக-வினர் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக பேசி வருகின்றனர். உயிரின் மதிப்பு

என்ன என்பது அவர்களைவிட அதிகமாக எனக்குத் தெரியும். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் இவர்களால்

தீங்கு ஏற்படுமோ என அஞ்சுகிறேன்.

அதனால், எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாடிகார்டுகளை நியமித்திருக்கிறேன்" எனத்

தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ். தற்போது சீருடை அணிந்த பாடிகார்டுகள் பிரகாஷ்ராஜ் செல்லும் எல்லா

இடங்களுக்கும் செல்கிறார்கள்.


Actor Prakash Raj newly appointed bodyguards for his protection. Prakash Raj has

taken this decision because they feel threatened by BJP'ians.

#prakashraj #bjp #bodyguards

Recommended