இனியும் கந்து வட்டியும், தற்கொலையும் தொடரக் கூடாது.. பிரகாஷ் ராஜ்- வீடியோ

  • 7 years ago
தமிழகத்தில் இனியும் கந்து வட்டியும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வதையும் தொடர விடக் கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார், ப்ரொடெக்ஷன் கம்பெனி வைத்திருந்த இவர், மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியனிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். அதற்கு வட்டிக்கு மேல் வட்டிக் கேட்டு அசோக்குமாரை அன்புச்செழியன் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் குடும்பத்துக்கு பெண்களையும் பெரியவர்களையும் கேவலமாக பேசியதால் மனமுடைந்த அசோக் குமார் நேற்று அபிராமபுரம் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழ் திரையுலகில் மாற்றம் செய்ய வேண்டும். பாதுகாப்பு இல்லாத துறையாக சினிமா துறை உள்ளது.

கடன் வாங்கித்தான் திரைப்படம் எடுக்கிறோம். பெரிய சம்பளம் வாங்குபவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். கருப்பு பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். தமிழக திரையுலகில் கந்து வட்டியால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Actor Prakash Raj says that Cine industry needs more transformation. That Industry is acting without any protection.

Recommended