காவிரிக்கும் காலாவுக்கும் என்ன சம்பந்தம்?...பிரகாஷ் ராஜ் கேள்வி- வீடியோ

  • 6 years ago
ரஜினியின் காலா பட ரிலீசை தடைசெய்வதால், எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் மும்பை தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.

இந்த படம் வரும் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. ஆனால் பட ரிலீசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. காவிரி விவகாரம் குறித்து ரஜினி தெரித்த கருத்துக்களுக்கு கர்நாடக அமைப்புகள் சில கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கர்நாடகாவில் பட ரிலீசை தடை செய்தது, அம்மாநில திரைப்பட வர்த்தக சபை.

Actor Prakash Raj has supported Rajini's Kaala movie, demanding to lift the ban on the movie's release.

Recommended