அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு தற்போதைக்கு தளபதி 63 என்று பெயர் வைத்துள்ளனர். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் எல்லாம் விஜய் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள். இந்நிலையில் இந்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி 63 படத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடிக்கிறாராம் கதிர். விஜய் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல் என்று தெரிய வந்துள்ளது. படத்தின் தலைப்பு விஜய் கதாபாத்திர பெயருடன் தொடர்புடையதாம். தலைப்பு மாஸாக இருக்குமாம்.
Be the first to comment